/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
கேரள மருத்துவ கழிவு விவகாரம் விஸ்வரூபம் தடுக்க தவறியதாக அரசுக்கு கட்சிகள் கண்டனம்
/
கேரள மருத்துவ கழிவு விவகாரம் விஸ்வரூபம் தடுக்க தவறியதாக அரசுக்கு கட்சிகள் கண்டனம்
கேரள மருத்துவ கழிவு விவகாரம் விஸ்வரூபம் தடுக்க தவறியதாக அரசுக்கு கட்சிகள் கண்டனம்
கேரள மருத்துவ கழிவு விவகாரம் விஸ்வரூபம் தடுக்க தவறியதாக அரசுக்கு கட்சிகள் கண்டனம்
ADDED : டிச 18, 2024 02:17 AM

திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம், சுத்தமல்லி அருகே நடுக்கல்லுார், கோடகநல்லுார் பகுதிகளில் கேரள மாநிலம், திருவனந்தபுரம் மண்டல புற்றுநோய் மையத்திலிருந்து கொண்டு வரப்பட்ட அபாயகரமான மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டன. இது குறித்து நம் நாளிதழில் நேற்று படம் வெளியானது.
இதையடுத்து, சுத்தமல்லி போலீசார் புதிய குற்றவியல் சட்டம் 271, 272 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் மருத்துவ கழிவுகளை கொட்டிய லாரி, அதன் உரிமையாளர், ஓட்டி வந்தவர் விபரம் சேகரிக்கப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும் என, கலெக்டர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
மருத்துவக் கழிவு கொட்டப்பட்ட இடத்தை அ.தி.மு.க., - பா.ஜ., நாம் தமிழர், எஸ்.டி.பி.ஐ., உள்ளிட்ட கட்சி மற்றும் பல்வேறு அமைப்பினர் பார்வையிட்டனர்.
மருத்துவக் கழிவுகளை கொட்டுவதை தடுக்க தவறிய தமிழக அரசுக்கு இக்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும், குப்பையை பாதுகாப்பாக அகற்ற வேண்டும் என, கோரிக்கை விடுத்தனர்.
மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்ட இடத்தில் பொது சுகாதார உயர் அதிகாரிகள், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்யவில்லை.
அபாயகரமான மருத்துவக்கழிவுகள் என்பதால் திருநெல்வேலி மாவட்டம், பரப்பாடியில் செயல்படும் அசெப்டிக் எனப்படும் அபாய மருத்துவ கழிவுகளை எரிக்கும் மையத்தின் மூலமே எரிக்க வேண்டும்.
மாறாக மாநகராட்சியின் குப்பை கிடங்கு உள்ள ராமையன்பட்டி குப்பை கிடங்கில் கொட்டினால், அங்கிருந்து வெளியாகும் கழிவுநீர் மீண்டும் அருகில் உள்ள கால்வாய் வழியாக தாமிரபரணி ஆற்றில் சேரும் அபாயமும் உள்ளது.