/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
வாலிபரின் பூணுால் அறுப்பு போலீஸ் விசாரணை
/
வாலிபரின் பூணுால் அறுப்பு போலீஸ் விசாரணை
ADDED : செப் 22, 2024 02:26 AM
திருநெல்வேலி:திருநெல்வேலியில் ஆன்மிக நிகழ்ச்சிக்கு சென்ற பிராமண வாலிபரின் பூணுாலை டூ வீலரில் வந்த நபர்கள் அறுத்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
திருநெல்வேலி தியாகராஜநகர் 14வது குறுக்கு தெருவில் ஆஸ்திக சமாஜம் டிரஸ்ட் உள்ளது. அங்கு ஆன்மிக நிகழ்வுகள், பஜனைகள் நடத்தப்படும். நேற்று மாலை பஜனை நடந்தது.
இதில் பங்கேற்க டி.வி.எஸ்., நகர் தெருவில் இருந்து மாலை 4:30 மணிக்கு அகிலேஷ் 24, பூணுால் அணிந்து சட்டையில்லாமல் நடந்து சென்றார். அப்போது டூவீலரில் சென்ற நான்கு பேர் அகிலேஷின் பூணுாலை இழுத்து அறுத்துவிட்டு தப்பினர்.
இது குறித்து அகிலேஷ் தரப்பினர் பெருமாள்புரம் போலீசில் புகார் செய்தனர். உதவி கமிஷனர் விஜயகுமார் தலைமையில் போலீசார் விசாரித்தனர்.
சிவந்திபட்டி ரோடு, தியாகராஜ நகர் பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் டூவீலரில் சென்ற வாலிபர்கள் குறித்து விசாரணை நடக்கிறது.