sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 26, 2026 ,பங்குனி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

 ஜாதி கலவரத்தை துாண்ட முயற்சி காவல் துறை கடும் எச்சரிக்கை

/

 ஜாதி கலவரத்தை துாண்ட முயற்சி காவல் துறை கடும் எச்சரிக்கை

 ஜாதி கலவரத்தை துாண்ட முயற்சி காவல் துறை கடும் எச்சரிக்கை

 ஜாதி கலவரத்தை துாண்ட முயற்சி காவல் துறை கடும் எச்சரிக்கை


ADDED : மார் 06, 2026 06:20 AM

Google News

ADDED : மார் 06, 2026 06:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜாதி கலவரத்தை துாண்ட முயற்சி

காவல் துறை கடும் எச்சரிக்கை



திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி., பிரசன்னகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி, பெரும்பத்து கிராமத்தில், மார்ச் 2ம் தேதி நடந்த கொலை சம்பவம் தொடர்பாக, காவல் துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளனர். நாங்குநேரி போலீஸ் ஸ்டேஷனில் வழக்குப்பதிவு செய்து, விரிவான விசாரணை நடந்து வருகிறது.

இதன் அடிப்படையில், சம்பவத்தில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து, சமூக வலைதளங்களில் பிரிவினையை துாண்டும் விதமாகவும், வன்முறையை ஊக்குவிக்கும் வகையிலும், பதிவுகள் வெளியிடப்படுவதாக, காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

சட்டம் - ஒழுங்கு பாதிக்கப்படும் வகையில் கருத்து பகிர்ந்த நபர்கள் கண்காணிக்கப்படுகின்றனர். விஜயநாராயணம் மற்றும் நாங்குநேரி போலீஸ் ஸ்டேஷன்களில், வன்முறையை துாண்டும் பதிவுகளை பதிவிட்டோர் மீது, தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த வழக்கில் தொடர்புடையோரை, கைது செய்யும் நடவடிக்கை தீவிரமாக நடந்து வருகிறது. சமூக வலைதளங்களில், விஷமத்தனமான மற்றும் பிரச்னைக்குரிய பதிவுகளை பகிர்வோர் மீது, கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us