/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
மோதலை துாண்டும் பதிவு வாலிபருக்கு போலீஸ் வலை
/
மோதலை துாண்டும் பதிவு வாலிபருக்கு போலீஸ் வலை
ADDED : அக் 06, 2025 01:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி:ஜாதி மோதலை துாண்டும் வகையில் சமூக வலைதளத்தில் பதிவிட்ட வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி அருகே உள்ள பட்டன்பிள்ளைபுதுாரைச் சேர்ந்தவர் மாயாண்டி. இவர், தன் சமூகவலைதள பக்கத்தில் ஜாதி மோதலை துாண்டும் வகையில் பதிவிட்டதாக புகார் எழுந்தது.
அதில், 'விட்டு கொடுத்து பழக்கமில்லை; வெட்டு கொடுத்து தான் பழக்கம்' என, குறிப்பிட்டிருந்தார். மாயாண்டி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.