/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
மின் கம்பம் முறிந்ததில் பசு, கன்று பரிதாப பலி
/
மின் கம்பம் முறிந்ததில் பசு, கன்று பரிதாப பலி
ADDED : அக் 06, 2025 01:12 AM
திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம், முக்கூடலில், நேற்று முன்தினம் மாலை இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. லட்சுமிபுரத்தில், சூறைக்காற்று வீசியது. இதில், வயலில் மேய்ந்து கொண்டிருந்த ஹரிகிருஷ்ணன் என்பவரின் பசு, கன்று மீது மின்கம்பம் முறிந்து விழுந்தது. இதில், பசுவும், கன்றும் சம்பவ இடத்திலேயே பலியாகின.
பின், மின்வாரிய ஊழியர்கள் உடனடியாக அப்பகுதிக்கான மின் இணைப்பை துண்டித்து அசம்பாவிதம் ஏற்படாமல் தடுத்தனர்.
முக்கூடல் - லட்சுமிபுரம் வயல்பகுதிகளில் பல மின்கம்பங்கள் சேதமடைந்தும், சாய்ந்த நிலையிலும் நீண்ட நாட்களாக உள்ளதாகவும், இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால், கால்நடைகள் இறந்துள்ளதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.