/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
வேலை வாங்கி தருவதாக மோசடி நடிகரிடம் போலீஸ் விசாரணை
/
வேலை வாங்கி தருவதாக மோசடி நடிகரிடம் போலீஸ் விசாரணை
வேலை வாங்கி தருவதாக மோசடி நடிகரிடம் போலீஸ் விசாரணை
வேலை வாங்கி தருவதாக மோசடி நடிகரிடம் போலீஸ் விசாரணை
ADDED : நவ 13, 2025 10:23 PM

திருநெல்வேலி: சின்னத்திரை நடிகர் தினேஷ் 40, மின்வாரியத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ. 3 லட்சம் மோசடி செய்ததான புகார் குறித்து போலீசார் விசாரித்தனர்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த தினேஷ் 40, பிக்பாஸ் சீசன் உள்ளிட்ட சின்னத்திரையில் நடித்து வருகிறார். திருநெல்வேலி மாவட்டம் தண்டையார்குளத்தைச் சேர்ந்த கருணாநிதி சென்னையில் சினிமாத்துறையில் கேண்டினில் வேலை செய்த போது தினேஷுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கத்தில் கருணாநிதி மனைவி நித்ய கல்யாணிக்கு மின் துறையில் வேலை பெற்று தருவதாக கூறிய தினேஷிடம் ரூ. 3 லட்சம் கொடுத்தார். ஆனால் வேலை வாங்கி தரவில்லை. பணத்தையும் திரும்பத்தரவில்லை. இதற்கிடையே சில நாட்களுக்கு முன் வள்ளியூர் வந்த தினேஷ் காரில் அழைத்துச் சென்று தாக்கியதாக கருணாநிதி பணகுடி போலீசில் புகார் செய்தார்.
தினேஷ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இவ்வழக்கில் போலீஸ் விசாரணைக்கு தினேஷ் அழைக்கப்பட்டார்.
தினேஷ் கூறுகையில், ''வேண்டுமென்றே சிலர் இத்தகைய புகார்களை கூறுகின்றனர். நான் யாரிடமும் பணம் பெறவில்லை. என் மீது விரோதம் உள்ள செல்வின் இப்புகாரின் பின்னணியில் உள்ளார். நான் கைதாகவில்லை. போலீசார் விசாரித்து விட்டு அனுப்பி விட்டனர்,'' என்றார்.

