/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
தொழிலாளி கொலை வாலிபருக்கு 'காப்பு'
/
தொழிலாளி கொலை வாலிபருக்கு 'காப்பு'
ADDED : மார் 06, 2026 11:15 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி : மானுார் அருகே, கூலித்தொழிலாளியை கொன்ற வாலிபர், கைது செய்யப்பட்டார். திருநெல்வேலி கம்மாளங்குளத்தைச் சேர்ந்தவர் பெருமாள், 50; கூலித்தொழிலாளி. நேற்று மாலை, 4:00 மணிக்கு, வீட்டின் முன், கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இதுகுறித்து, மானுார் போலீசார் விசாரித்த போது, அதே பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் மகன் சுதர்சன், 24 , என்பவர், மது போதையில், பெருமாளை கொலை செய்தது, தெரிந்தது. இதையடுத்து, பெருமாளின் சடலத்தை மீட்ட போலீசார், சுதர்சனை கைது செய்தனர்.சுதர்சனின் தாய்க்கும் பெருமாளுக்கும் பழக்கம் இருந்ததால், ஆத்திரத்தில் சுதர்சன், அவரை கொலை செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.

