/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
பள்ளிவாசல் கட்டுவதை எதிர்த்து போராட்டம்
/
பள்ளிவாசல் கட்டுவதை எதிர்த்து போராட்டம்
ADDED : டிச 08, 2024 11:58 PM

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் மானூர் அருகே மேலமாவடியில் அக்னி மாடன் சுவாமி கோயில் அருகே பள்ளிவாசல் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட ஹிந்து முன்னணியினர் 70 பேர் கைது செய்யப்பட்டனர்.
மேலமாவடியில் தேவேந்திர குல வேளாளர் சமூகத்திற்கு பாத்தியப்பட்ட அக்னி மாடன் சுவாமி கோயில் உள்ளது. கோயிலுக்கு அருகில் 98 சென்ட் நிலம் உள்ளது.
அதில் பள்ளிவாசல் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று மாலை ஹிந்து முன்னணியினர் மாநில செயலாளர் குற்றாலநாதன் தலைமையில் மானூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன் அந்த அமைப்பினர், கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 18 பெண்கள் உட்பட 70 பேரை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.