/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
கோயில் விழா அனுமதி மறுப்பு தாலுகா ஆபீசில் போராட்டம்
/
கோயில் விழா அனுமதி மறுப்பு தாலுகா ஆபீசில் போராட்டம்
கோயில் விழா அனுமதி மறுப்பு தாலுகா ஆபீசில் போராட்டம்
கோயில் விழா அனுமதி மறுப்பு தாலுகா ஆபீசில் போராட்டம்
ADDED : செப் 05, 2025 12:59 AM

திருநெல்வேலி:திருநெல்வேலிமாவட்டம் கூடங்குளம் முத்தாரம்மன் கோயிலில் கொடைவிழா நடத்த அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து, கோயில் வரிதாரர்கள் நேற்று ராதாபுரம் தாலுகா அலுவலகத்தில் ஆடுகளுடன் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இங்கு ஒரே சமூகத்தைச் சேர்ந்த இருதரப்பினருக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாக கோயில் கொடை விழா நடத்துவது தொடர்பாக பிரச்னை இருந்து வருவதால், இந்தாண்டும் விழாவுக்கு அரசு துறைகள் அனுமதி வழங்கவில்லை. இந்நிலையில் இப்பிரச்னையில் கோயிலுக்கு நேர்த்திக்கடனாக வளர்த்த ஆடுகளுடன் வந்த வரிதாரர்கள், ராதாபுரம் தாலுகா அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தாசில்தார் மாரிசெல்வம் அவர்களிடம் ' இந்த கோயில் பிரச்சனை குறித்து இருதரப்பும் உயர் நீதிமன்ற மதுரை கிளை அறிவுறுத்தியபடி சிவில் நீதிமன்றத்தில் மனு அளித்து தீர்வு காண வேண்டும். நாங்கள் விழா நடத்த அனுமதிக்க முடியாது” என விளக்கமளித்தார். இதையடுத்து போராட்டக்காரர்கள் ஆடுகளுடன் அமைதியாக கலைந்து சென்றனர்.