/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
மாஞ்சோலை பிரச்னைக்கு தீர்வு கோரி சென்னையில் போராட்டம் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி அறிவிப்பு

ADDED : செப் 28, 2024 02:37 AM
திருநெல்வேலி:மாஞ்சோலை தேயிலைத்தோட்ட தொழிலாளர்கள் பிரச்னைக்கு தீர்வுகோரி சென்னையில் விரைவில் போராட்டம், பேரணி நடத்த உள்ளதாக புதிய தமிழகம் கட்சித்தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: மாஞ்சோலை தொழிலாளர்கள் பிரச்னையில் 2006ம் ஆண்டு வன உரிமைச் சட்டத்தின் படியே தீர்வு காண வேண்டுமென உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடர்ந்த வழக்கு நடந்து வருகிறது.
தொழிலாளர்களுக்கு நீதி வழங்காமல் பிபிடிசி நிர்வாகத்துடன் திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம், அரசு அதிகாரிகளும் சேர்ந்து தொழிலாளர்களை வெளியேற்றிட துடிக்கின்றனர்.
மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை வழங்காமல் தடுத்துள்ளனர்.
எனவே தேசிய மனித உரிமை ஆணையக் குழுவினர் விசாரணை மேற்கொண்டனர்.
மத்திய, மாநில அரசுகள் தீர்க்கமாக முடிவு ஏற்படுத்த கோரி விரைவில் சென்னையில் போராட்டம், பேரணி நடத்த உள்ளோம். அதற்கு முன்னோட்டமாக தென் மாவட்டங்களில் செப்.28, 29ல் ஆயத்த கூட்டங்களை நடத்த உள்ளோம் என தெரிவித்துள்ளார்.