/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
சங்கரன்கோவில் கோயிலுக்குள் புகுந்தது மழை நீர்
/
சங்கரன்கோவில் கோயிலுக்குள் புகுந்தது மழை நீர்
ADDED : மே 03, 2025 12:07 AM

திருநெல்வேலி:திருநெல்வேலி, தென்காசி, துாத்துக்குடி மாவட்டங்களில் நேற்று கோடை மழை கொட்டித்தீர்த்தது. சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலுக்குள் மழை நீர் புகுந்தது.
திருநெல்வேலிமாவட்டத்தில் நேற்று மதியம் 3:00 மணிக்கு பிறகு இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. வெள்ளங்குழி, கே.டி.சி.,நகர் உள்ளிட்ட இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அதன் சுற்றுப்புற பகுதிகளிலும் மாலை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. இதனால் சங்கரன்கோவிலில் தாழ்வான பகுதிகளான திருவேங்கடம் சாலை, தெற்கு ரதி வீதி உள்ளிட்டவற்றில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. அதனுடன் சாக்கடை நீரும் கலந்ததால் அப்பகுதிகளில் கடுமையான துர்நாற்றம் வீசியது.
சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயில் வளாகத்தில் மழை நீர் புகுந்தது. அதில் நின்ற படி பக்தர்கள் தரிசனம் செய்தனர். கோயில் நிர்வாகத்தினர் மழை நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். துாத்துக்குடியிலும் மழை கொட்டியது.