ADDED : பிப் 12, 2025 02:24 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி:திருநெல்வேலி வ.உ.சி., மைதானம் அருகில் வணிக கட்டடத்தின் தரைத்தளத்தில் ஸ்விஸ் சாக்லெட் காஸ்மெட்டிக்ஸ் எனும் வெளிநாட்டு பொருட்கள் விற்பனை செய்யும் கடை உள்ளது.
நேற்று காலை கடை ஷட்டர் கதவு திறந்து கிடந்தது.
உரிமையாளர் சுந்தர் வந்து பார்த்தபோது பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. கடையில் இருந்த சி.சி.டி.வி. காட்சிகளில் வெள்ளை சட்டை, பேண்ட் அணிந்த மர்ம நபர் பையுடன் உள்ளே புகுந்து ரூ.60,000 மற்றும் விலை உயர்ந்த அழகு சாதன பொருட்களை திருடிச் சென்றது தெரியவந்தது.
போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹதிமணி உத்தரவுப்படி குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.