/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
பழமையான நெல்லை சங்கீத சபாவுக்கு 'சீல்'
/
பழமையான நெல்லை சங்கீத சபாவுக்கு 'சீல்'
ADDED : டிச 03, 2024 04:42 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி : திருநெல்வேலியில், 80 ஆண்டுகள் பழமையான சங்கீத சபாவை வரி பாக்கிக்காக மாநகராட்சி ஊழியர்கள் சீல் வைத்தனர். திருநெல்வேலி ஜங்ஷன் கைலாசபுரத்தில் உள்ள நெல்லை சங்கீதா சபா, 1945ல் உருவானது.
கிட்டத்தட்ட 22 லட்சம் ரூபாய் வரி பாக்கிக்காக மாநகராட்சி அதிகாரிகள் நேற்று சீல் வைத்தனர். சபா நிர்வாகி வழக்கறிஞர் ஆறுமுகம் கூறியதாவது:
வணிக நோக்கமற்று, கலை இலக்கியத்திற்காக செயல்படும் ஒரு பாரம்பரிய மையம். மாநகராட்சி கூறுமளவுக்கு வரி பாக்கி இல்லை. இது தொடர்பாக ஐகோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது. விரைவில் தீர்வு காண்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.