ADDED : மார் 23, 2025 01:53 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி: மாநகராட்சி குடிநீர் குழாயில் தண்ணீர் பாம்பு வந்ததால், தண்ணீரை பிடித்த குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
திருநெல்வேலி மாநகராட்சி, தச்சநல்லுார் மண்டலம், செல்வ விக்னேஷ் நகரைச் சேர்ந்தவர் மாரியப்பன், 55. இவர் வீட்டில் மாநகராட்சி குடிநீர் இணைப்பு உள்ளது.
குடிநீர் விநியோகிக்கும் நேரத்தில், குழாயில் பாத்திரங்கள் வைத்து பிடிப்பது வழக்கம். நேற்று காலை குடிநீர் வந்த நேரத்தில், பாத்திரம் வைத்தபோது, தண்ணீருடன் தண்ணீர் பாம்பு ஒன்று வந்து விழுந்துள்ளது.
ஒரு அடி நீளம் உள்ள அந்த பாம்பை பார்த்து முதலில் அதிர்ச்சியடைந்த மாரியப்பன் குடும்பத்தினர், பின் ஒரு பாட்டிலில் பிடித்து வைத்தனர். மாநகராட்சி அதிகாரிகளுக்கு தெரிவித்தனர். அதிகாரிகள் யாரும் வராததால், அதை கால்வாயில் விட்டனர்.