/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
மாமியாரை கொலை செய்து தப்பிய மருமகன் மனைவியையும் விட்டு வைக்கவில்லை
/
மாமியாரை கொலை செய்து தப்பிய மருமகன் மனைவியையும் விட்டு வைக்கவில்லை
மாமியாரை கொலை செய்து தப்பிய மருமகன் மனைவியையும் விட்டு வைக்கவில்லை
மாமியாரை கொலை செய்து தப்பிய மருமகன் மனைவியையும் விட்டு வைக்கவில்லை
ADDED : நவ 07, 2025 02:10 AM
திருநெல்வேலி: தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊத்துமலை அருகே மனைவியை வெட்டியதுடன், மாமியாரை வெட்டி கொலை செய்து தப்பியவரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஊத்துமலையைச் சேர்ந்தவர் துரைச்சி 53. இவரது மகள் காளீஸ்வரிக்கும் சேர்ந்தமரம் அருகே பொய்கையைச் சேர்ந்த பாலசுப்பிரமணியனுக்கும் 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.
சமீபத்தில் குடும்பத்தகராறில் காளீஸ்வரி கோபித்துக் கொண்டு தன் தாயார் வீட்டுக்கு சென்று விட்டார்.
நேற்று காலை அவரை சமாதானப்படுத்த மாமியார் வீட்டுக்கு சென்ற பாலசுப்பிரமணியன், கோபத்தில் மனைவியின் கையை அரிவாளால் வெட்டினார். காயமுற்ற காளீஸ்வரியை சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.வெளியே சென்ற பாலசுப்பிரமணியன் மீண்டும் மாமியார் வீட்டுக்கு சென்றார். அங்கு தனியாக இருந்த மாமியார் துரைச்சியை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பினார்.
பலத்த காயமுற்ற துரைச்சி சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார்.
மகள் காளீஸ்வரி தீவிர சிகிச்சையில் உள்ளார். பாலசுப்பிரமணியனை ஊத்துமலை போலீசார் தேடி வருகின்றனர்.