/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
ஜாமினில் வந்தவர் மீண்டும் கைது
/
ஜாமினில் வந்தவர் மீண்டும் கைது
ADDED : நவ 07, 2025 01:57 AM
திருநெல்வேலி: 7 வழக்குகளில் கைதாகாமல் இருந்த கண்ணபிரான் கடலுார் சிறையில் இருந்து ஜாமினில் வந்த போது கைதானார்.
திருநெல்வேலி தச்ச நல்லுார் கண்ணபிரான் (எ) கந்தசாமி. தேவேந்திர குல வேளாளர் எழுச்சி இயக்க அமைப்பாளர்.
இவர் மீது வழக்குகள் உள்ளன. திருச்சி ஜீயர்புரம் போலீஸ் ஸ்டேஷன் வழக்கில் கைதாகி கடலுார் சிறையில் இருந்தார். நேற்று ஜாமினில் வெளிவந்த அவரை தச்சநல்லுார் போலீஸ் ஸ்டேஷன் மீது வெடிகுண்டு வீசப்பட்ட வழக்கு உள்ளிட்ட 7 வழக்குகளில் கடலுார் சிறை வாசலில் போலீசார் கைது செய்தனர். திருநெல்வேலி அழைத்து வரப்பட்ட அவர் அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்கு பிறகு மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்டார். கைதை கண்டித்து ஆதரவாளர்கள் சாத்துாரில் கோஷம் எழுப்பினர்.

