/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
'தமிழரை ஸ்டாலின் ஆதரிக்க வேண்டும்'
/
'தமிழரை ஸ்டாலின் ஆதரிக்க வேண்டும்'
ADDED : ஆக 20, 2025 11:15 PM

திருநெல்வேலி:''துணை ஜனாதிபதி தேர்தலில் தமிழரான சி.பி.ராதாகிருஷ்ணனை முதல்வர் ஸ்டாலின் ஆதரிக்க வேண்டும்,'' என, திருநெல்வேலியில் சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவு தினத்தையொட்டி சிலைக்கு மாலை அணிவித்த பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.
அவர் கூறியதாவது: சி.பி.ராதாகிருஷ்ணன் நேர்மையானவர். அவரை வெற்றியடையச் செய்வது தமிழர்களின் கடமை. இதுகுறித்து முதல்வர் ஸ்டாலினிடம் பேசியுள்ளேன். தமிழரான சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரிக்க வேண்டும். இல்லை என்றால் அவரது வார்த்தைகள் வெற்று வார்த்தைகளாகி விடும்.
முப்பது நாட்கள் சிறை தண்டனை அனுபவித்தால் மக்கள் பிரதிநிதிகள் பதவி இழக்கும் வகையில் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆளுங்கட்சிக்கும் இச்சட்டம் பொருந்தும். பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் நேர்மையாக இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த சட்டம், என்றார்.

