/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
ஜாதி வீடியோ பதிவிட்டால் கடும் நடவடிக்கை: போலீஸ்
/
ஜாதி வீடியோ பதிவிட்டால் கடும் நடவடிக்கை: போலீஸ்
ADDED : டிச 23, 2024 12:22 AM

திருநெல்வேலி : ஜாதி மோதலை துாண்டும் வகையில் சமூக வலைத்தளங்களில் வீடியோ பதிவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருநெல்வேலி எஸ்.பி.,சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி கோர்ட் அருகே டிச.,20ம் தேதி ஒரு வழக்கில் ஆஜராக வந்த மாயாண்டி 23, என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
ஏற்கனவே நடந்த ராஜாமணி என்பவரது கொலைக்கு பழிக்கு பழியாக நடந்த இக்கொலையில் ஈடுபட்ட 7 பேர் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலியில் ஜாதி மோதல்கள் தொடர்பாக சில சமூக இளைஞர்கள் மற்ற சமூகங்களை அவதூறு செய்தும், மிரட்டலாகவும் வீடியோ வெளியிடுகின்றனர்.
இதனால் மேலும் மோதல்கள் நடக்க வாய்ப்பு உள்ளது. இதை தடுக்க வேண்டும் என வலியுறுத்தி நேற்று தினமலர் நாளிதழில்சமூக வலைத்தளங்களில் ஜாதி போர் என்ற செய்தி வெளியானது.
இதுகுறித்து திருநெல்வேலி எஸ்.பி., சிலம்பரசன் விடுத்துள்ள அறிக்கையில், திருநெல்வேலியில் ஜாதி ரீதியாக மோதலை ஏற்படுத்தும் வீடியோக்கள் வெளியிடுபவர்களை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். மோதல்கள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
2024ல் இதுவரை இத்தகைய வீடியோக்களை பதிவிட்ட 27 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. 2023ல் 49 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது என எஸ்.பி. சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.

