/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
சென்னையில் கல்வி சுற்றுலா விமானத்தில் பறந்த மாணவி
/
சென்னையில் கல்வி சுற்றுலா விமானத்தில் பறந்த மாணவி
ADDED : ஆக 16, 2025 10:17 PM

திருநெல்வேலி:திருநெல்வேலியில் 10ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவியும், உடன் ஒரு ஆசிரியையும் துாத்துக்குடியில் இருந்து விமானத்தில் சென்னைக்கு கல்வி சுற்றுலா சென்றனர்.
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அருகே செட்டிகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியில், கடந்த ஆண்டு 10ம் வகுப்பு தேர்வில் 483 மதிப்பெண்கள் பெற்றவர் சபரி சந்தியா. தற்போது பிளஸ் 1 படிக்கிறார்.
ராதாபுரம் பகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க., முன்னாள் ராஜ்யசபா எம்.பி., சவுந்தரராஜன், கடந்தாண்டு அப்பள்ளியில் நடந்த விழாவில் பங்கேற்றபோது, 'ஒவ்வொரு ஆண்டும் பள்ளியில் முதலிடம் பிடிக்கும் மாணவருக்கு தன் செலவில் இரண்டு நாட்கள் சுற்றுலா அனுப்புவேன்' என கூறியிருந்தார்.
அதன்படி மாணவி சபரி சந்தியா மற்றும் அவருடன் நாலாயிரம் என்ற ஆசிரியையும் துாத்துக்குடியில் இருந்து விமானத்தில் சென்னை சென்றனர்.
சென்னையில் இரண்டு நாட்கள் தங்கி இருக்கவும், கல்வி மற்றும் அறிவியல் சுற்றுலா தலங்களை பார்த்த பின் ஊர் திரும்பவும், முன்னாள் எம்.பி., ஏற்பாடு செய்துள்ளார்.