ADDED : ஜூலை 03, 2026 06:46 AM

அ நிறம் | அளவு
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட கண்ணனை 49, சிங்கப்பெண் சிறப்பு படையினர் கைது செய்தனர்.
இம்மாவட்டத்தில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் குற்றத்தடுப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர். அப்போது புகார் தெரிவிக்க எஸ்.ஐ.,யின் அலைபேசி எண் மாணவிகளுக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில் மாணவி ஒருவர் கண்ணன் தொடர்ந்து தன்னை பாலியல் சீண்டல் செய்து வருவதாக எஸ்.ஐ., அலைபேசி எண்ணில் புகார் தெரிவித்தார்.
இதையடுத்து சிங்கப்பெண் சிறப்பு படையினர் முக்கூடல் பகுதியைச் சேர்ந்த கண்ணனை கைது செய்தனர். அம்பாசமுத்திரம் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
