/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
மாணவிக்கு தொந்தரவு ஆசிரியர் போக்சோவில் கைது
/
மாணவிக்கு தொந்தரவு ஆசிரியர் போக்சோவில் கைது
ADDED : ஜூலை 26, 2025 11:02 PM
திருநெல்வேலி,:திருநெல்வேலி மேலப்பாளையம் ஹாமீம்புரத்தில் ரஹ்மானியா தனியார் இருபாலர் மேல்நிலைப்பள்ளி செயல்படுகிறது.
இதன் தாளாளராக ஹசன் அபுபக்கர் உள்ளார். இவரது குடும்பத்தினர் நடத்தும் பள்ளி என்பதால் அவரது மகன் ரபீக் 39, பள்ளியில் 9 மற்றும் 10ம் வகுப்புகளுக்கு பாடம் எடுக்கிறார். இவர் 7-ம் வகுப்பு மாணவி ஒருவரை தனியாக அழைத்துச்சென்று பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டுள்ளார்.
பின் அதை வெளியே கூறக்கூடாது எனக்கூறி மிரட்டி பணமும் கொடுத்துள்ளார். மாணவி பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். மாணவியின் பெற்றோர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். போலீஸ் விசாரணையில் மாணவிக்கு ரபீக் பாலியல் ரீதியில் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது. தொடர்ந்து அவர் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.