/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
ஆயன்குளம் 'அதிசய கிணற்றுக்கு' வந்தது தாமிரபரணி வெள்ள நீர்
/
ஆயன்குளம் 'அதிசய கிணற்றுக்கு' வந்தது தாமிரபரணி வெள்ள நீர்
ஆயன்குளம் 'அதிசய கிணற்றுக்கு' வந்தது தாமிரபரணி வெள்ள நீர்
ஆயன்குளம் 'அதிசய கிணற்றுக்கு' வந்தது தாமிரபரணி வெள்ள நீர்
ADDED : டிச 15, 2025 02:21 AM

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், ஆயன்குளம் 'அதிசய கிணற்றுக்கு' தாமிரபரணி வெள்ளநீர் கால்வாய் வழியாக வந்து சேர்ந்தது.
திசையன்விளை அருகே முதுமொத்தன்மொழி ஊராட்சிக்குட்பட்ட ஆயன்குளத்தில் விவசாய கிணறு அதிசய கிணறாக, 2022ல் கண்டறியப்பட்டது. கால்வாயில் இருந்து அந்த கிணற்றுக்குள் செல்லும் நீரால் அந்த கிணறு நிரம்பவே இல்லை.
சபாநாயகர் அப்பாவு, அப்போதைய கலெக்டர் விஷ்ணு ஆகியோர் சென்னை ஐ.ஐ.டி., பேராசிரியர்களின் குழுவை கொண்டு விரிவான ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வில், கிணற்றுக்குள் முழுமையாக சுண்ணாம்பு பாறைகள் அமைந்துள்ளதும், அதனால் பூமிக்கடியில் 5 கி.மீ., பரப்பளவில் அந்த கிணற்றிலிருந்து நீரோட்ட கால்வாய்கள் உருவாகியுள்ளதும் கண்டறியப்பட்டது.
இவ்வாறு அந்த கிணற்றுக்குள் செல்லும் தண்ணீர் சுற்று வட்டாரங்களில் நிலத்தடி நீரை உயர்த்தி, கோடை காலங்களிலும் அந்த பகுதியை வளமாக்கியது.
எனவே, தமிழக அரசு, நீர்வளத்துறை மூலம் அதிசய கிணற்றுக்கு தனி கால்வாய் மற்றும் ஷட்டர் அமைத்து, சுற்றுப்புறங்களை கான்கிரீட் சுவரால் வலுப்படுத்தி பராமரித்தது.
தற்போது வடகிழக்கு பருவ மழைக்காலத்தில் தாமிரபரணி வெள்ளநீர் கால்வாய் மூலம் ஆயன்குளம் படுகைக்கு வரும் தண்ணீர், அதிசயக் கிணற்றுக்குள் திருப்பி விடப்பட்டுள்ளது.
இந்த நீர்வரத்து மூலம் சுற்றுப்புற கிணறுகளின் நீர்மட்டம் உயர்வதாகவும், இதனால் விவசாயம் செழிக்கும் எனவும், விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

