/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
பத்திரப்பதிவு துறை சர்வர் 9வது நாளாக முடங்கியது
/
பத்திரப்பதிவு துறை சர்வர் 9வது நாளாக முடங்கியது
ADDED : அக் 08, 2025 03:26 AM

திருநெல்வேலி:தமிழகம் முழுதும் பத்திரப் பதிவு துறை சர்வர் செயல் படாததால் நேற்று 9வது நாளாக பத்திரப்பதிவு முழுமையாக நடக்கவில்லை.
தமிழகம் முழுதும் பத்திரப்பதிவு துறையின் செயல்பாடுகள் இணையதளம் வாயிலாக நடக்கிறது. பத்திரங்கள் மேற்கொள்ள, முன்னதாக அதை ஆன்லைன் மூலம் அனுப்பி வைப்பது வழக்கம். செப்., 29ல் தமிழகம் முழுதும் பத்திரப்பதிவுகள் பாதிக்கப்பட்டன.
ஒரு வாரம் முழுதும் இதே போல சர்வர் பாதிப்பால் போதிய பத்திரங்கள் பதிவாகவில்லை.
நேற்று திங்கட்கிழமை காலையில் இருந்தே பத்திரப்பதிவு துறையின் டி.சி.எஸ்., இணையதளம் செயல்படவில்லை. இதனால் எந்த பத்திரங்களும் அனுப்ப முடியாமல் பத்திரப்பதிவு நடக்கவில்லை.
தமிழகம் முழுதும் ஒரு நாளில், 500 -- 600 கோடி ரூபாய் மதிப்பிலான பத்திர பதிவுகள் மூலம் அரசுக்கு வருமானம் வருகிறது. ஆனால், 9 நாட்களாக சர்வர் பாதிப்பால் பதிவுத்துறை முடங்கியுள்ளது.
முன்பதிவு செய்து வெளியூர்களிலிருந்து பத்திரப்பதிவு மேற்கொள்ள வரும் பொதுமக்களும் மிகுந்த பாதிப்பிற்குஉள்ளாகியுள்ளனர்.