/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
நெல்லை மாநகராட்சி ரூ.1.55 கோடி இழப்பீடு தர மா.க., வாரியம் பரிந்துரை
/
நெல்லை மாநகராட்சி ரூ.1.55 கோடி இழப்பீடு தர மா.க., வாரியம் பரிந்துரை
நெல்லை மாநகராட்சி ரூ.1.55 கோடி இழப்பீடு தர மா.க., வாரியம் பரிந்துரை
நெல்லை மாநகராட்சி ரூ.1.55 கோடி இழப்பீடு தர மா.க., வாரியம் பரிந்துரை
ADDED : அக் 10, 2025 12:46 AM

திருநெல்வேலி:திருநெல்வேலி மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு இடங்களில், தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர் நேரடியாக கலப்பதால் மாநகராட்சி நிர்வாகம், 1.55 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க மாசு கட்டுப்பாட்டு வாரியம் பரிந்துரை செய்துள்ளது.
கழிவுநீர்
திருநெல்வேலி மாநகராட்சியையொட்டி தாமிரபரணி ஆற்றில் கருப்பந்துறை, சி.என்.கிராமம், மீனாட்சிபுரம், கைலாச புரம், சிந்துபூந்துறை, வண்ணாரப்பேட்டை என பல்வேறு இடங்களில் கழிவுநீர் நேரடியாக கலக்கிறது.
உயர்நீதிமன்ற நீதிபதிகள், அரசு உயர் அதிகாரிகள், அரசியல் கட்சி தலைவர்கள் ஆய்வு செய்து உத்தரவிட்ட பிறகும், கழிவுநீர் கலப்பது நிறுத்தப்படவில்லை.
எனவே, கழிவுநீர் கலக்கும் மாநகராட்சி நிர்வாகம் மாதம்தோறும், 5 லட்சம் ரூபாய் வீதம் அரசுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என, மாசு கட்டுப்பாட்டு வாரியம் பரிந்துரைத்துள்ளது.
அதன்படி, 2020 முதல் 2023 வரை மாசு கட்டுப்பாடு வாரியம் கணக்கிட்டு, 28 கோடியே 73 லட்சம் ரூபாயை திருநெல்வேலி மாநகராட்சி, மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு வழங்க உத்தரவிட்டது.
தற்போது, 2023 ஜனவரி முதல் 2025 ஜூலை வரை 31 மாதங்களுக்கு மாதம், 5 லட்சம் ரூபாய் வீதம், 1.55 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என பரிந் துரைக்கப்பட்டுள்ளது.
பரிந்துரை
மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய இன்ஜினியர் கிருஷ்ணபாபு, சென்னையில் உள்ள மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைமைக்கு இதுகுறித்து பரிந்துரைத்துள்ளார்.
இதுகுறித்து, தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேள்வி எழுப்பிய சுற்றுச்சூழல் ஆர்வலர் எஸ்.பி.முத்துராமன் கூறுகையில், ''சென்னை மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அந்த பரிந்துரையை திருநெல்வேலி மாநகராட்சிக்கு நோட்டீஸ் ஆக அனுப்பியும் கூட, மாநகராட்சி அதிகாரிகள் அந்த உத்தரவுகளை கண்டுகொள்வதில்லை,'' என்றார்.