/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
பெட்டைகுளத்தில் மனிதநேய மக்கள் முன்னேற்ற கழக புதிய கிளை துவக்கம்
/
பெட்டைகுளத்தில் மனிதநேய மக்கள் முன்னேற்ற கழக புதிய கிளை துவக்கம்
பெட்டைகுளத்தில் மனிதநேய மக்கள் முன்னேற்ற கழக புதிய கிளை துவக்கம்
பெட்டைகுளத்தில் மனிதநேய மக்கள் முன்னேற்ற கழக புதிய கிளை துவக்கம்
ADDED : ஆக 01, 2011 01:59 AM
திசையன்விளை : பெட்டைகுளத்தில் மனிதநேய மக்கள் முன்னேற்ற கழகத்தின் புதிய
கிளை துவக்க நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சிக்கு நெல்லை மாவட்ட தலைவர் கோல்டன்
ஷேக் தலைமை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராக நிறுவன தலைவர் பாளை., ரபீக்,
மாநில கொள்கை பரப்பு செயலாளர் முஸ்தபா, மாநில தலைமை நிலைய செயலாளர் ராஜா
முஹம்மது, ஜமால், சாந்தி, ஜாபர் கலந்து கொண்டனர். அல்பி ரப்பானி, அன்ஸார்,
இம்தியாஸ்மீரான், ரசூல் மைதீன் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் கிளை
நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தலைவராக மீரான்முகைதீன், செயலாளராக
ஷேக்தாவூது, பொருளாளராக அப்துல் ஹமீது, துணைத் தலைவராக ஜலாலுதீன், துணை
செயலாளர்களாக முகைதீன், ஷாகுல்ஹமீது தேர்வு செய்யப்பட்டனர்.கூட்டத்தில்,
பிரேத பரிசோதனை கூடங்களில் பிரேத பரிசோதனை செய்ய ஆண் பிரேதங்களுக்கு ஆண்
டாக்டர்களையும், பெண் பிரேதங்களுக்கு பெண் டாக்டர்களையும், செவிலியரையும்
நியமிக்க வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்தியும் மற்றும் தீர்மானங்கள்
நிறைவேற்றப்பட்டது.