/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
உவரியில் தூண்டில் வளைவு அமைக்க மைக்கேல்ராயப்பன் எம்எல்ஏ.,வலியுறுத்தல்
/
உவரியில் தூண்டில் வளைவு அமைக்க மைக்கேல்ராயப்பன் எம்எல்ஏ.,வலியுறுத்தல்
உவரியில் தூண்டில் வளைவு அமைக்க மைக்கேல்ராயப்பன் எம்எல்ஏ.,வலியுறுத்தல்
உவரியில் தூண்டில் வளைவு அமைக்க மைக்கேல்ராயப்பன் எம்எல்ஏ.,வலியுறுத்தல்
ADDED : ஆக 01, 2011 01:59 AM
திசையன்விளை : உவரியில் தூண்டில் வளைவு அமைக்க மைக்கேல்ராயப்பன் எம்.எல்.ஏ., வலியுறுத்தியுள்ளார்.
ராதாபுரம் தொகுதி எம்.எல்.ஏ.,மைக்கேல்ராயப்பன் தமிழக மீன்வளத்துறை
அமைச்சரிடம் கொடுத்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-'கடற்கரை மீனவ
கிராமங்களில் ஒன்றான உவரியில் அண்மையில் ஏற்பட்ட கடலரிப்பினால் 20 அடி
அகலம் கொண்ட ரோடு முற்றிலும் அடித்து செல்லப்பட்டதோடு மரங்கள்,
மின்கம்பங்கள் சாய்ந்ததோடு, மீன்பிடி சாதனங்கள் வைத்திருக்கும் கூடாரம்
மற்றும் மீனவ மக்கள் வசித்து வரும் வீடுகளும் கடலுக்குள் அடித்து
செல்லப்பட்டதுடன் இன்றும் இந்நிலை தொடர்ந்து வருகின்றது.உவரி மீனவ
கிராமத்தில் கடலரிப்பில் இருந்து நிரந்தரமாக பாதுகாத்திட தூண்டில் வளைவு
அமைத்து கொடுக்க வேண்டுமென்பது இப்பகுதி மீனவ மக்களின் நீண்டநாள்
கோரிக்கையாகும். இத்திட்ட பணிக்கு உவரி மீனவ மக்களும் தங்கள் சொந்த
பணத்தில் இருந்து சுமார் ரூ.10 லட்சம் செலவில் இண்டோமர் என்ற நிறுவனத்தின்
மூலம் கடலினை ஆய்வு செய்து அதன் அறிக்கையினையும் அரசுக்கு
சமர்ப்பித்துள்ளனர்.எனவே உயிரை பணயம் வைத்து மிகவும் ஆபத்தான தொழில் செய்து
வரும் ஏழை, எளிய மீனவ மக்களின் நலன் கருதி உவரி அழிவுகளை நிரந்தரமாக
தடுத்திட தூண்டில் வளைவு அமைத்திட போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க
வேண்டும்' என மனுவில் கூறியுள்ளார்.