/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
கல்லிடைக்குறிச்சியில் இலவச நோட்டு வழங்கல்
/
கல்லிடைக்குறிச்சியில் இலவச நோட்டு வழங்கல்
ADDED : ஆக 01, 2011 02:06 AM
அம்பாசமுத்திரம் : கல்லிடைக்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளியில், சென்னை
சாம்பு மகரிஷி கல்வி அறக்கட்டளை சார்பில் மாணவர்களுக்கு இலவச நோட்டு
வழங்கும் விழா நடந்தது.பள்ளி தலைமையாசிரியர் சந்திரசேகரன் தலைமை வகித்தார்.
நகர அதிமுக செயலாளர் சங்கர நாராயணன், பொருளாளர் மாரிராஜ், துணை செயலாளர்
நாராயணன், சேரன்மகாதேவி ஒன்றிய எம்.ஜி.ஆர்.
மன்ற செயலாளர் ஆதம் முன்னிலை
வகித்தனர். அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் துரைராஜ் வரவேற்றார்.தமிழ்
திரைப்பட வளர்ச்சி கழக தலைவர் நலவிரும்பி மாணவர்களுக்கு நோட்டுகளை வழங்கி
பேசினார். கல்லிடைக்குறிச்சி டவுன் பஞ்சாயத்து உறுப்பினர்கள் தேசிகநாதன்,
பிரேமா மாரிராஜ், சந்தானம், நெல்லை ரயில்வே மேலாளர் கல்யாணி,
அம்பாசமுத்திரம் வக்கீல் சங்க செயலாளர் ராஜூ, பொருளாளர் சரவணன், கூட்டுறவு
துறை சார்பதிவாள் முருகன், இந்தியன் ஓவர்சீஸ் பாங்க் மேலாளர் வீரமணி,
டாக்டர் பத்மநாபன், நெடுஞ்சாலை துறை முன்னாள் கண்காணிப்பு பொறியாளர்
ஆறுமுகம், ஜானகிராம், சங்கரலிங்கம், முஸ்தபா, சத்தயமூர்த்தி, டேனியல்,
ஸ்டெல்லா உட்பட பலர் கலந்து கொண்டனர்.பள்ளி உதவி தலைமையாசிரியர் தேவதாசன்
நன்றி கூறினார்.