/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
சிவகிரி டவுன் பஞ்.,தலைவர் பதவி 13 பேர் வேட்பு மனு தாக்கல்
/
சிவகிரி டவுன் பஞ்.,தலைவர் பதவி 13 பேர் வேட்பு மனு தாக்கல்
சிவகிரி டவுன் பஞ்.,தலைவர் பதவி 13 பேர் வேட்பு மனு தாக்கல்
சிவகிரி டவுன் பஞ்.,தலைவர் பதவி 13 பேர் வேட்பு மனு தாக்கல்
ADDED : செப் 30, 2011 02:26 AM
சிவகிரி : சிவகிரி டவுன் பஞ்., தலைவர் பதவிக்கு 13 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
சிவகிரி டவுன் பஞ்.,ஆண்கள் பொது பிரிவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 18 வார்டுகள் உள்ளன. வேட்புமனு தாக்கலின் இறுதி நாளான நேற்று தலைவர் பதவிக்கு டாக்டர் செண்பகவிநாயகம் (திமுக), எஸ்.ஆர்.சுப்பையாபாண்டியன் (சுயே), எஸ்.ராஜேந்திரன் (பா.ஜ.,) கற்பகம் குருநாதன் (அதிமுக), குருநாதன் (அதிமுக மாற்று), ராமராஜ் (திமுக மாற்று), சவுந்தர்ராஜன் (தேமுதிக), ஆதம்சீனி (சுயே), பூமிநாதன் (மதிமுக), ரணவீறு (இந்திய கம்யூ), சேதுராஜா (காங்.,) காளிதாஸ் (சுயே), காளியப்பன் (சுயே) ஆகிய 13 பேர் வேட்புமனு செய்துள்ளனர். உறுப்பினர் பதவிக்கு 18 வார்டுகளுக்கு சேர்த்து 116 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர். தேர்தல் ஆணையாளராக பாலசுப்பிரமணியம், உதவி தேர்தல் ஆணையாளராக கல்யாணசுந்தரம், குருவையா செயல்பட்டனர்.
ராயகிரி டவுன் பஞ்.,சில் தலைவர் பதவிக்கு 5 பேர் போட்டியிடுகின்றனர். மொத்தம் 18 வார்டுகள் உள்ளது. அதிமுக சார்பில் ஆண்டவர், காங்., சார்பில் பால்ராஜூ, திமுக சார்பில் வேல்சாமி, மதிமுக சார்பில் கனிராசு உட்பட 5 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர். மொத்தம் 15 வார்டுகளுக்கும் சேர்த்து 42 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர். தேர்தல் அலுவலராக ராயகிரி டவுன் பஞ்., நிர்வாக அதிகாரி சிவகாமிநாதன் செயல்பட்டார்.
வாசுதேவநல்லூர் டவுன் பஞ்.,சில் தலைவர் பதவிக்கு ஆறுமுகம் (சுயே), வனராஜா (சுயே), முகைதீன் (காங்.,) குமரேசன் (அதிமுக), கருப்பசாமி (அதிமுக மாற்று), முருகையா (தேமுதிக), செல்லத்துரை (திமுக), திருமலைமுருகன் (திமுக மாற்று) சீதாராமன் (சுயே), மருதையா (சிபிஎம்) முருகன் (எ) ஸ்டாலின் (சுயே), கருப்பசாமி (சுயே) ஆகிய 12 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர். தேர்தல் அதிகாரியாக செயல் அலுவலர் வைத்திலிங்கம், உதவி தேர்தல் அதிகாரியாக முருகன், விஜயலட்சுமி செயல்பட்டனர்.