/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
சிலை மோசடி கும்பல் 8பேர் சிக்கினர் : அம்பையில் பரபரப்பு
/
சிலை மோசடி கும்பல் 8பேர் சிக்கினர் : அம்பையில் பரபரப்பு
சிலை மோசடி கும்பல் 8பேர் சிக்கினர் : அம்பையில் பரபரப்பு
சிலை மோசடி கும்பல் 8பேர் சிக்கினர் : அம்பையில் பரபரப்பு
ADDED : ஜூலை 24, 2011 01:42 AM
அம்பாசமுத்திரம் : அம்பாசமுத்திரத்தில் உலோகத்தினாலான சாமி சிலையை ஐம்பொன் சிலையேன கூறி ஏமாற்றி விற்க முயன்ற சிலை மோசடி கும்பலை சேர்ந்த எட்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து சுவாமி சிலை, இரு கார்கள், மோட்டார் பைக்கு பறிமுதல் செய்யப்பட்டுள்ள.தமிழகத்தில் சிலை கடத்தல் கும்பல் தொடர்ந்து கைவரிசை காட்டி வருகிறது. சமீபத்தில், நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தை அடுத்த அம்பலவாணபுரத்திலுள்ள நாராயண சுவாமி கோயிலில் ஐம்பொன்னிலான சுவாமி, அம்பாள் சிலைகள் திருடப்பட்டு, கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து இப்பகுதியில் சிலை கடத்தல் கும்பல் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வந்தது.நெல்லை சரக டி.ஐ.ஜி., வரதராஜூ, மாவட்ட எஸ்.பி., வியேந்திர பிதரி உத்தரவின் பேரில் அம்பாசமுத்திரம் டி.எஸ்.பி., முத்துசங்கரலிங்கம் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார், எஸ்.ஐ., பார்த்திபன், எஸ்.எஸ்.ஐ.,க்கள் சுப்பிரமணியன், மீனாட்சி சுந்தரம், சுடலைமுத்து, கிருஷ்ணன், ராஜவேலு, சுந்தரராஜன், ராமலிங்கம் ஏட்டுக்கள் காளிமுத்து, மோகன் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டன.
இந்த தனிப்படையினர் நேற்று அதிகாலை அம்பாசமுத்திரம் தாமிபரபரணி ஆற்றுச்சாலையில் காசிநாத சுவாமி கோயில் அருகே சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் கார்களில் இருந்த திருநெல்வேலி ராமையன்பட்டியை சேர்ந்த அப்துல் காதர் (55), ஆறுமுகதாஸ் (45), மீனாட்சிபுரத்தை சேர்ந்த ரமேஷ் (34), பாளையை சேர்ந்த முத்து (39), கோயம்புத்தூர் கோப்பகுமார் (41), தூத்துக்குடி தாளமுத்து நகர் கருப்பசாமி (24), டூவிபுரத்தை சேர்ந்த சரவணன் (44), பிரேம்நகரை சேர்ந்த கார்த்திக் (21) ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.விசாரணையில், அவர்களிடம் பூமியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட ஒரு அடி உயரத்தில் உலோகத்தினாலான மார்பளவு அம்பாள் சிலை ஒன்று இருப்பதும், அதனை ஐம்பொன் சிலையேன கூறி லட்சத்தில், விற்பனை செய்ய முயன்று கொண்டிருப்பதும் தெரியவந்தது. இக்கும்பலிடமிருந்து உலோக சிலை மீட்கப்பட்டது. இரு கார்களும், பைக்கும் பறிமுதல் செய்யப்பட்டன.இதனையடுத்து 8 பேரையும் கைது செய்த போலீசார் இம்மோசடியில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா, இக்கும்பலுக்கு சிலை கடத்தலில் ஏதேனும் தொடர்பு உள்ளதா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.