/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
செங்கோட்டை தர்மஸம்வர்த்தினி அம்பாள் கோயிலில் வளைகாப்பு வைபவம் கோலாகலம்

ADDED : ஆக 03, 2011 12:31 AM
செங்கோட்டை : செங்கோட்டை தர்மஸம்வர்த்தினி அம்பாள் சமேத குலசேகரநாத சுவாமி கோயிலில் ஆடிப்பூரம் வளைகாப்பு வைபவம் நேற்று கோலாகலமாக நடந்தது.
செங்கோட்டையில் பிரசித்தி பெற்ற குலசேகரநாதசுவாமி கோயிலில் ஆடிப்பூர விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. விழாவை முன்னிட்டு நேற்று காலை 10 மணிக்கு தர்மஸம்வர்த்தினி அம்பாளுக்கு அம்பாளுக்கு அபிஷேகம் நடந்தது. மதியம் 12 மணிக்கு தீபாராதனை, மாலை 4.30 மணிக்கு அழகிய மனவாளபெருமாள் கோவிலில் இருந்து ஆடிப்பூர விழாவிற்கு சீர்வரிசை கொண்டுவரப்பட்டது. ஏராளமான பெண்கள் சீர்வரிசையை எடுத்து வந்தனர். தொடர்ந்து அம்பாளுக்கு வளைகாப்பு வைபவம் நடந்தது. மாலை 6.30 மணிக்கு தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தர்ஸம்வர்த்தினி அம்பாள் சமேத ஸ்ரீகுலசேகரநாதசுவாமி கோயில் பரம்பர அர்ச்சகர் மீனாட்சிசுந்தரபட்டர் (எ) கணேசபட்டர் பூஜைகளை நடத்தி வைத்தார். விழாவில் மண்டகப்படிதாரர் சுப்பிரமணியன் மற்றும் செங்கோட்டை, பண்பொழி, கொட்டாகுளம், இலஞ்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.