ADDED : ஆக 04, 2011 01:27 AM
விக்கிரமசிங்கபுரம் : விக்கிரமசிங்கபுரம் பி.எல்.டபுள்யு.ஏ., பள்ளியில் சர்.சி.வி.ராமன் அறிவியல் மன்றம் மற்றும் பாரதியார் கலை இலக்கிய மன்ற துவக்க விழா நடந்தது.பள்ளி தலைமையாசிரியர் பன்னீர் செல்வம் தலைமை வகித்தார்.
பள்ளி பிளஸ் 2 மாணவி உமா கார்த்திகா வரவேற்றார். அறிவியல் மன்றத்தின் ஆண்டறிக்கையை ஆசிரியர் சுரேஷ்பாபு வாசித்தார். வேதியியல் 2011ம் ஆண்டு என்ற தலைப்பில் மாணவிகள் சங்கீதா, பிலோமின் ஏஞ்சல் பேசினர்.அம்பை கலைக்கல்லூரி முதல்வர் வேலையா, ஆழ்வார்குறிச்சி கல்லூரி வேதியியல் துறை தலைவர் அழகுமுத்து சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேசினர். பாரதியார் கலை இலக்கிய மன்ற துவக்க விழாவில் மன்ற செயலாளர் இளங்கோ மன்றம் குறித்து பேசினார். மன்ற மாணவர் செயலாளர் இளங்கோ பிரபு செல்வகணேஷ் வரவேற்றார்.கர்ம வீரர் காமராஜர் என்ற தலைப்பில் மாணவி சக்திசிவப்பிரியா பேசினார். விழாவில் பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரி முதல்வர் முனைவர் முருகன் காமராஜவின் கல்விப்பணிகுறித்தும், புனித யோவான் கல்லூரி ஓய்வு பெற்ற பேராசிரியர் வளன் அரசு இலக்கிய நயம் குறித்தும் பேசினர்.விழாவில் பள்ளி மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன.

