/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
வி.கே.புரம் அருகே கல்வி உபகரணங்கள் வழங்கல்
/
வி.கே.புரம் அருகே கல்வி உபகரணங்கள் வழங்கல்
ADDED : ஆக 06, 2011 01:50 AM
விக்கிரமசிங்கபுரம் : வி.கே.புரம் அருகே கல்சுண்டு காலனி டாக்டர் அம்பேத்கார் நடுநிலைப் பள்ளியில் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.விக்கிரமசிங்கபுரம் அருகே கல்சுண்டு காலனி டாக்டர் அம்பேத்கார் நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவியர் சிறப்பு பயிற்சி மையத்தில் கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா நடந்தது.
விழாவிற்கு அம்பை வட்டார வளமைய மேற்பார்வையாளர் கோபால் தலைமை வகித்தார். ஆசிரியர் பயிற்றுநர் ராஜேஸ்வரி முன்னிலை வகித்தார். தலைமையாசிரியை காந்திமதி கஸ்தூரிபாய் வரவேற்றார்.விழாவில் அரசால் வழங்கப்பட்ட சீருடை, காலனி, நோட்டு புத்தகம் மற்றும் எழுது பொருட்கள் அடங்கிய பேக்கை 25 மாணவ, மாணவிகளுக்கு வட்டார வளமைய மேற்பார்வையாளர் கோபால் வழங்கி பேசினார். வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர் சங்கர் பள்ளியின் செயல்பாடு குறித்து பேசினார்.பள்ளி உதவி ஆசிரியை பேபி கிறிஸ்டிராணி நன்றி கூறினார்.