sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

தென்காசி பகுதியில் விவசாய கூலி வேலைக்கு ஆட்கள் பற்றாக்குறை விவசாயிகள் கவலை

/

தென்காசி பகுதியில் விவசாய கூலி வேலைக்கு ஆட்கள் பற்றாக்குறை விவசாயிகள் கவலை

தென்காசி பகுதியில் விவசாய கூலி வேலைக்கு ஆட்கள் பற்றாக்குறை விவசாயிகள் கவலை

தென்காசி பகுதியில் விவசாய கூலி வேலைக்கு ஆட்கள் பற்றாக்குறை விவசாயிகள் கவலை


ADDED : ஆக 11, 2011 02:19 AM

Google News

ADDED : ஆக 11, 2011 02:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குற்றாலம் : தென்காசி சுற்றுவட்டார பகுதிகளில் விவசாய கூலிவேலைக்கு ஆட்கள் கிடைக்காததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் இப்பகுதியில் கனமழை பெய்தும் குளங்கள் நிரம்பி விவசாயிகள் விவசாயபணிகளை மேற்கொள்வார்கள் விவசாயமும் செழிப்படைந்து அமோக நெல் விளைச்சலும் ஏற்பட்டு விவசாயிகள் மகிழ்ச்சியுடனும் செழிப்புடனும் வாழ்ந்து வந்தனர். தற்போது இப்பகுதியில் பெய்ய வேண்டிய மழை போதிய அளவு பெய்யாததால் விவசாயிகள் உழவு பணி, விதை விதைக்கும் பணிகளை செய்ய முடியாமல் ஆழ்ந்த கவலையடைந்து வந்தனர்.



இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் வர்ண பகவானின் பார்வையினால் ஓரளவு மழைபெய்தது. இதன் அடிப்படையில் விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் கிடைக்காவிட்டாலும் ஒருசில குளங்கள் நிரம்பியும், நிரம்பாமலும் இருந்துவந்ததால் போதிய நீரைக்கொண்டு கார்சாகுபடி விவசாய பணிகளை உழவு இயந்திரங்கள் மூலம் உழவு பணிகளையும், விதை விதைக்கும்பணிகளையும் தாமதமாகவே மேற்கொண்டனர்.



தற்போது ஒருசில பகுதிகளில் நடுவை பணிகள் நடந்து மருந்து தெளிக்கும் பணியும் முறையாக நடந்து வருகிறது. தென்காசி, குற்றாலம், ஆயிரப்பேரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் இப்போதுதான் நடுவை பணிகளை மேற்கொண்டுவருகின்றன. நகர் பகுதிகளில் விவசாய கூலி வேலைக்கு கூட ஆட்கள் கிடைக்காததால் கிராமப்பகுதிகளிலிருந்து ஆட்டோ மூலம் கூலி ஆட்களை ஏற்றிவந்து நடுவை பணிகளை மேற்கொள்கின்றனர்.



கிராமப்புறங்களிலிருந்து நடுவை பணிகளுக்கு வர எவரும் முன்வருவதில்லை. கிராமங்களில் வசிக்கும் மக்கள் தனது அத்தியாவசிய, ஆடம்பர வாழ்க்கையை மேற்கொள்ளும் வகையிலும், குழந்தைகளின்படிப்பு நலன்கருதியும் நகர்புறங்களுக்கு குடிபெயர்ந்து விடுகின்றனர். மேலும் அரசால் கொண்டுவரப்பட்ட தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்திலும் பலர் பணியாற்றிவருகின்றனர். இந்த இரண்டு காரணங்களுக்காகவும் விவசாய தொழிலாளர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுவருகிறது. எனவே விவசாய தொழிலாளர்கள் எதிர்கால நலன்கருதி விவசாய தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச கூலியை அரசே நிர்ணயித்து செயல்படுத்தினால் மட்டுமே விவசாயம் செழிப்படையும் என விவசாயிகள் கருதது தெரிவித்துள்ளனர்.










      Dinamalar
      Follow us