/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
பேட்டை ராணி அண்ணா கல்லூரியில் "நாக்' கமிட்டி ஆய்வு நாளை ஆரம்பம்
/
பேட்டை ராணி அண்ணா கல்லூரியில் "நாக்' கமிட்டி ஆய்வு நாளை ஆரம்பம்
பேட்டை ராணி அண்ணா கல்லூரியில் "நாக்' கமிட்டி ஆய்வு நாளை ஆரம்பம்
பேட்டை ராணி அண்ணா கல்லூரியில் "நாக்' கமிட்டி ஆய்வு நாளை ஆரம்பம்
ADDED : ஆக 11, 2011 02:20 AM
திருநெல்வேலி : பேட்டை ராணி அண்ணா அரசினர் மகளிர் கலைக் கல்லூரியில் நாளையும் (12ம் தேதி), 13ம் தேதியும் 'நாக்' கமிட்டியினர் ஆய்வு செய்கின்றனர்.
பேட்டை ராணி அண்ணா அரசினர் மகளிர் கலைக் கல்லூரி 'பி-பிளஸ்' அந்தஸ்துடன் செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் தமிழ், ஆங்கிலம், தாவரவியல், பொருளாதாரம் உட்பட 11 துறைகள் செயல்பட்டு வருகிறது. 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் பல்வேறு பாட பிரிவுகளை பயில்கின்றனர். 75க்கும் மேற்பட்ட பேராசிரியைகள் பணியாற்றி வருகின்றனர். கல்லூரியில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை குடிநீர், கழிப்பறை, கேன்டீன், இட வசதிகள், மாணவிகளின் எண்ணிக்கை, பேராசிரியர்களின் எண்ணிக்கை, துறைகளின் விபரம், பயிற்றுவிக்கப்படும் பாட பிரிவுகள் விபரம், ஆய்வு மாணவிகளின் விபரம், புத்தக வெளியீடுகள், தேர்ச்சி சதவீதம், இடைநின்றல் மாணவிகளின் எண்ணிக்கை, சாதனை மாணவிகளின் விபரம், என்.எஸ்.எஸ் உட்பட பல்வேறு குழுக்களின் செயல் திட்டங்கள் உட்பட அனைத்து விபரங்களையும் தேசிய தர நிர்ணய ஆய்வு குழு 'நாக்' ஆய்வு செய்து வருகிறது.
இந்த ஆய்வுகளின் அடிப்படையில் அறிக்கை தயாரிக்கப்பட்டு இந்த அறிக்கை பல்கலைக் கழக மானிய குழுவிடம் சமர்ப்பிக்கப்படுகிறது. பல்கலைக் கழக மானிய குழு இதனை மதிப்பீடு செய்து கல்லூரிக்கு வேண்டிய நிதி ஒதுக்கீடு உட்பட அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும். பேட்டை ராணி அண்ணா மகளிர் கலைக் கல்லூரியில் 'நாக்' கமிட்டி நாளையும் (12ம் தேதி), நாளை மறுநாளும் (13ம் தேதி) ஆகிய 2 நாட்கள் ஆய்வு செய்கிறது. ஒரிசா, விசாகப்பட்டினம், பெங்களூரு மாநிலங்களை சேர்ந்த 3 பேர் கொண்ட குழுவினர் ஆய்வு செய்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரிக் கல்வி இணை இயக்குனர் மற்றும் பேட்டை ராணி அண்ணா மகளிர் கலைக் கல்லூரி முதல்வர் ஆஷா மற்றும் பேராசிரியைகள், மாணவிகள் செய்துள்ளனர்.

