/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
பள்ளமடை குளத்தில் பணியாற்றியவர்களுக்கு அரசு நிர்ணயித்த சம்பளம் வழங்க கோரிக்கை

ADDED : செப் 06, 2011 01:09 AM
திருநெல்வேலி : பள்ளமடை குளத்தில் பணி செய்தவர்களுக்கு அரசு நிர்ணயித்த சம்பளத்தை வழங்கவேண்டும் என கலெக்டரிடம் மனுக் கொடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நெல்லை திருத்து தேசிய ஊரக வேலைவாய்ப்பு ஊழியர்கள் கூறியதாவது: பல்லிக் கோட்டை பஞ்., நெல்லை திருத்து கிராமத்தில் குடியிருந்து வருகிறோம். நெல்லை திருத்தில் இருந்து பள்ளமடை குளத்தில் கடந்த 18ம் தேதி முதல் 31ம் தேதி வரை பணி செய்தோம். குளத்தில் இருந்து மண் அள்ளி 20 அடி தூரம் சுமந்து சென்று குளக்கரையை உயர்த்தினோம். இந்த வேலைக்கு ஊதியம் வழங்காமல் அதிகாரிகள் ஏமாற்றுகின்றனர். பணியை பார்வையிட வந்த அதிகாரி எங்களை தகாத வார்த்தைகளால் திட்டினார் எனவே இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட கலெக்டர் விசாரணை நடத்தி, அரசு நிர்ணயித்த ஊதியத்தை வழங்கவும், அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.