/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
சுரண்டை வட்டாரஓட்டுநர் சங்க கூட்டம்
/
சுரண்டை வட்டாரஓட்டுநர் சங்க கூட்டம்
ADDED : ஆக 22, 2011 02:28 AM
சுரண்டை:சுரண்டையில் வட்டார ஓட்டுநர் சங்க கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு
அய்யப்பன் தலைமை வகித்தார். வட்டார ஓட்டுநர் சங்க தலைவர் தங்கேஷ்வரன்,
கவுரவ தலைவர் பஸ்கால், பால்ராஜ் முன்னிலை வகித்தனர். செயலாளர் ருக்மணி
வரவேற்றார். பொருளாளர் உதயசங்கர் வரவு, செலவு கணக்கை தாக்கல் செய்தார்.
கூட்டத்தில் விநாயகர் சதூர்த்தி விழாவை சிறப்பாக கொண்டாடுவது, அண்ணாதுரை
சிலையின் வடபுறம், தென்புறத்தில் பொதுமக்கள், மாணவ, மாணவிகள் நலன் கருதி
வேகத்தடை அமைக்க வேண்டும். சுரண்டையிலும் ஒரு கூவமாக காட்சியளித்து வரும்
செண்பகால்வாயை சீரமைக்க வேண்டும். பஸ் ஸ்டாண்ட் ரோட்டில் ஏற்பட்டு வரும்
போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய வேண்டும் என்பன போன்ற தீர்மானங்கள்
நிறைவேற்றப்பட்டன.டிரைவர் சங்க தலைவர் தங்கேஷ்வரன் நன்றி கூறினார்.