ADDED : ஆக 22, 2011 02:29 AM
புளியங்குடி:புளியங்குடியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.புளியங்குடியில் மத்திய,
மாநில அரசு எஸ்.சி.,எஸ்.டி.,பொதுத்துறை ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில்
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய பின்னடைவு காலிப்பணியிடமான
விஏஓ தேர்வு முடிவுகள் வெளியிட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
நடந்தது.புளியங்குடி பஸ் ஸ்டாண்ட் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட
ஒருங்கிணைப்பாளர் சின்னத்துரை தலைமை வகித்தார். சிவகிரி வட்ட கிளை செயலாளர்
மைதுகனி, நடனசிகாமணி முன்னிலை வகித்தனர்.
வேளாண்துறை அலுவலர் மாடசாமி
வரவேற்றார்.ஆர்ப்பாட்டத்தில் 1077 காலிப்பணியிட விஏஓ தேர்வு முடிவுகளை
நிறுத்தி வைத்ததை கண்டித்தும், அரசு ஆணை எண்கள் 156 மற்றும் 91 ஆகியவற்றை
ரத்து செய்ய வலியுறுத்தியும் வட்டக்கிளை பொறுப்பாளர்கள் சிவகிரி ஆசிரியர்
சிவராஜ், கடையநல்லூர் வேலுச்சாமி, தென்காசி குமார், சங்கரன்கோவில்
வேல்முருகன், ஆசிரியர்கள் குருசாமி, ராஜ்சுதா, திருஞானசம்பந்தர்,
புளியங்குடி நகராட்சி உறுப்பினர் சுந்தர்ராஜ், மாநில செயற்குழு உறுப்பினர்
கற்பகராஜ், ஊழியர்கள் சங்க மாவட்ட செயலாளர் முருகேசன், மண்டல
பொறுப்பாளர்கள் பாக்கியமுத்து, அய்யனார், மாவட்ட பொறுப்பாளர்கள்
தூத்துக்குடி மோகன்ராஜ், ராமநாதபுரம் பேராசிரியர் சவுந்திரபாண்டியன், மாநில
ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் டாக்டர் நாகூர்கனி ஆகியோர் பேசினர்.
மாநில ஒருங்கிணைப்பாளர் கணேசன் நன்றி கூறினார்.