/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
25 சதவீத போனஸ் வழங்க வலியுறுத்தி ஐ.என்.டி.யு.சி., தொழிற்சங்கம் ஆர்ப்பாட்டம்
/
25 சதவீத போனஸ் வழங்க வலியுறுத்தி ஐ.என்.டி.யு.சி., தொழிற்சங்கம் ஆர்ப்பாட்டம்
25 சதவீத போனஸ் வழங்க வலியுறுத்தி ஐ.என்.டி.யு.சி., தொழிற்சங்கம் ஆர்ப்பாட்டம்
25 சதவீத போனஸ் வழங்க வலியுறுத்தி ஐ.என்.டி.யு.சி., தொழிற்சங்கம் ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 28, 2011 12:43 AM
திருநெல்வேலி : நெல்லையில் 25 சதவீத போனஸ் வழங்க வலியுறுத்தி அரசுப்போக்குவரத்துக்கழக ஐ.என்.டி.யு.சி., தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அனைத்து தொழிலாளர்களுக்கும் உச்சவரம்பு இன்றி 25 சதவீத தீபாவளி போனஸ் வழங்குவது, புதிய தொழிலாளர்களை பணிநிரந்தரப்படுத்துவது, ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு உரிய பணப்பலன்களை உடனே வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வண்ணார்பேட்டை அரசுப்போக்குவரத்துக்கழக தலைமை அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தலைவர் பொன்னையா தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் கணபதி என்ற கண்ணன், பொருளாளர் சுந்தர்ராஜன், அமைப்புச்செயலாளர் சுப்பிரமணியன், துணை பொதுச்செயலாளர் ஆறுமுகம், மத்திய துணைத்தலைவர் கந்தையா, தலைமை நிலைய செயலாளர் எம்.என்.பிள்ளை முன்னிலை வகித்தனர். கவுரவத்தலைவர் சுடலைமுத்து துவக்கி வைத்தார்.
பேரவை பொதுச்செயலாளர் ஆவுடையப்பன், அவைத்தலைவர் வேலுச்சாமி, மாவட்டத்தலைவர் வீரை கிருஷ்ணன், மாநகர் மாவட்டத்தலைவர் உமாபதிசிவன், நிர்வாகிகள் நல்லசிவன், பாலச்சந்தர், சந்திரன், ராமசாமி, மதியழகன், ராசு, வீரன், பாலசுப்பிரமணியன், முருகன், சண்முகவேல், பரமசிவம், ரெங்கநாதன், கலிஸ்டஸ், மந்திரமூர்த்தி, கிறிஸ்டோபர், செல்வம் பேசினர். நெல்லை, தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள், போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.