/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
தேசிய வினாடி-வினா போட்டி பாளை.,பள்ளி மாணவர்கள் சாதனை
/
தேசிய வினாடி-வினா போட்டி பாளை.,பள்ளி மாணவர்கள் சாதனை
தேசிய வினாடி-வினா போட்டி பாளை.,பள்ளி மாணவர்கள் சாதனை
தேசிய வினாடி-வினா போட்டி பாளை.,பள்ளி மாணவர்கள் சாதனை
ADDED : செப் 28, 2011 12:43 AM
திருநெல்வேலி : தேசிய உலோகவியல் வினாடி-வினா போட்டியில் பாளை., மகாராஜநகர் ஜெயேந்திரா பள்ளி மாணவர்கள் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.
தேசிய உலோகவியல் கழகம் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் வினாடி-வினா போட்டியின் இறுதி சுற்றுப்போட்டிகள் நடந்தன. இதில் இலங்கையை சேர்ந்த 4 அணிகள் உட்பட 36 அணிகள் பங்கேற்றன. இந்த போட்டியில் பாளை., மகாராஜநகர் ஜெயேந்திரா பள்ளி மாணவர்கள் பொன்.அரவிந்தன், விக்னேஷ் தேசிய அளவில் முதலிடத்தை பிடித்தனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தேசிய உலோகவியல் நாளான வரும் நவம்பர் 14ம்தேதி ஹைதராபாத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் 30ஆயிரம் ரூபாய் ரொக்கப்பரிசு மற்றும் வெற்றிக்கோப்பை வழங்கப்படவுள்ளது. போட்டியில் வென்ற மாணவர்களை நெல்லை மெட்ரிக்பள்ளி ஆய்வாளர் ராஜ பாலன் பாராட்டினார்.