/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
அட்சய பாத்திர பட்ஜெட் : அமைச்சர் செந்தூர்பாண்டியன் பெருமிதம்
/
அட்சய பாத்திர பட்ஜெட் : அமைச்சர் செந்தூர்பாண்டியன் பெருமிதம்
அட்சய பாத்திர பட்ஜெட் : அமைச்சர் செந்தூர்பாண்டியன் பெருமிதம்
அட்சய பாத்திர பட்ஜெட் : அமைச்சர் செந்தூர்பாண்டியன் பெருமிதம்
ADDED : ஆக 05, 2011 02:57 AM
கடையநல்லூர் : அதிமுக அரசின் பட்ஜெட் தாக்கல் அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரமாக அமைந்திருப்பதாக அமைச்சர் செந்தூர்பாண்டியன் தெரிவித்துள்ளார்.தமிழக அரசின் 2011-12ம் ஆண்டிற்கான பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.
பட்ஜெட் குறித்து தமிழக கதர் மற்றும் கிராம தொழில்துறை அமைச்சர் செந்தூர்பாண்டியன் கூறியிருப்பதாவது:-
''தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் தேர்தல் நேரத்தில் தெரிவிக்கப்பட்ட வாக்குறுதிகள் பெருமளவில் நிறைவேற்றுவதற்கான அம்சங்கள் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளன. விவசாயம், தொழில், வேலைவாய்ப்பு போன்ற மூன்று துறைகளுக்கு மட்டுமின்றி கல்வி நலன் மற்றும் இளைஞர் நலனுக்கும் முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. மலைவாழ் மக்களுக்கு நல்ல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.கடந்த திமுக ஆட்சியில் இருளில் மூழ்கிய தமிழகத்தினை மீட்போம் என முதல்வர் ஜெயலலிதா தேர்தல் நேரத்தில் தெரிவித்த வாக்குறுதியின் அடிப்படையில் அதிமுக ஆட்சி அமைந்த ஒருசில நாட்களிலேயே தமிழகத்தில் அதிகமாக காணப்பட்ட மின்தடை படிப்படியாக குறைக்கப்பட்டுள்ளது.
தற்போது மின்தடை இல்லாத மாநிலமாக தமிழகத்தை நிலைநாட்டும் பொருட்டு 22 கோடியே 800 லட்சம் ரூபாய் செலவில் 3 ஆயிரத்து 800 மெகாவாட் மின்சாரம் தயாரிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மின் உற்பத்தி அதிகரிக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.சாலை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட மக்களின் அடிப்படை வசதிகளுக்கு தமிழக பட்ஜெட்டில் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. மக்களின் தேவைகளை அறிந்து பட்ஜெட் அறிவிக்கப்பட்டுள்ளது. முழுமையான பொது காப்பீட்டு திட்டம் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளது. தமிழகத்தில் நேற்று அறிவிக்கப்பட்ட பட்ஜெட்டில் நெல்லை மாவட்டத்திற்கு சிறப்பு கிடைக்கும் வகையில் வரலாற்று சாதனையாக கால்நடை அரசு ஆஸ்பத்திரி நெல்லை மாவட்டத்தில் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக பட்ஜெட் அறிவிப்பினை பொறுத்தவரை அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திர பட்ஜெட்டாக அமைந்துள்ளது'' என்றார்.