/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
வள்ளியூர் அருகே திருநங்கை குடிசை தீக்கிரை
/
வள்ளியூர் அருகே திருநங்கை குடிசை தீக்கிரை
ADDED : ஆக 09, 2025 02:11 AM

திருநெல்வேலி:வள்ளியூர் அருகே திருநங்கையின் குடிசை வீடு தீக்கிரையானது.
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே ஊருக்கு வெளியே ஒதுக்குப்புறமாக சூட்டுப்பொத்தை பகுதியில் 36 திருநங்கைகளுக்கு தலா 2 சென்ட் வீதம் அரசு நிலம் வழங்கியுள்ளது. அதில் சிலர் குடிசை அமைத்து வசிக்கின்றனர்.
தங்கள் குடியிருப்புக்கு குடிநீர், மின் விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்திருந்தனர். இதனிடையே அந்தப்பகுதியில் அரசு தலைமை மருத்துவமனை வருவதாலும் அது மேய்ச்சல் புறம்போக்கு நிலம் என்பதாலும் அவர்களுக்கு வேறு இடத்தில் நிலம் தருவதாகவும், அங்கிருந்து காலி செய்யும்படியம் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் தாங்கள் அங்கேயே குடியிருப்போம் என கூறிவந்தனர்.
இந்நிலையில் நேற்று அதிகாலையில் திருநங்கைகளின் தலைவி தாமரை 32, என்பவரின் குடிசை தீப்பற்றி எரிந்தது. அங்கு திருநங்கைகள் யாரும் இல்லாததால் பாதிப்பு இல்லை. பின்னர் சென்று பார்த்தபோது குடிசை வீட்டில் இருந்த கட்டில் உள்ளிட்ட உடைமைகள், ரூ. 35 ஆயிரம் ரொக்கம் உள்ளிட்டவை எரிந்து தீக்கிரையாயின.
தாமரைக்கு எதிரான தனிப்பட்ட விரோதத்தில் மர்ம நபர்களால் தீ வைக்கப்பட்டதா என்பது குறித்து
வள்ளியூர் போலீசார் விசாரித்தனர்.