/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
திசையன்விளையில் தீ விபத்தில் வீடுகள் எரிந்து நாசம்
/
திசையன்விளையில் தீ விபத்தில் வீடுகள் எரிந்து நாசம்
திசையன்விளையில் தீ விபத்தில் வீடுகள் எரிந்து நாசம்
திசையன்விளையில் தீ விபத்தில் வீடுகள் எரிந்து நாசம்
ADDED : செப் 27, 2011 12:42 AM
திசையன்விளை : திசையன்விளையில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று வீடுகள் எரிந்து சாம்பலாயின.திசையன்விளை புளியடி தெருவில் நேற்று அதிகாலை சுமார் 5.30 மணியளவில் திடீரென தீப்பிடித்தது.
இதில் இத்தெருவில் உள்ள மூக்கையாநாடார் மகன் சிவகுமார் என்பவரது ஓலை வீடும், அவரது வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் பால்நாடார் மகள் நல்லம்மாள் என்பவரது ஓலை வீடும், சுப்பையா நாடார் மகன் செல்வன் என்பவரது ஓலை வீடும், குடோனும் எரிந்து விபத்துக்குள்ளானது.இதில் சுமார் ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள புளி மற்றும் புளியமுத்து, ரொக்கப்பணம், டூவீலர், டி.வி, மிக்ஸி, கிரைண்டர், பீரோ, பத்திரங்கள், துணிகள், தட்டுமுட்டு சாமான்கள் உட்பட அனைத்தும் முற்றிலும் எரிந்து சாம்பலாயின. இதில் சேத மதிப்பு லட்சத்தை தாண்டும் என கூறப்படுகிறது. விபத்துக்கான காரணம் தெரியவில்லை. யாரேனும் தீ வைத்தனரா அல்லது தற்செயலாக இந்த தீ விபத்து நேர்ந்ததா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இதுகுறித்து தகவல் அறிந்ததும் திசையன்விளை நிலைய தீயணைப்பு அலுவலர் (பொறுப்பு) சுபாஷ் தலைமையில் வீரர்கள் பாலசுப்பிரமணியன், அப்துல்காதர், காளிசங்கர் விரைந்து சென்று தீ மேலும் பரவாமல் தடுத்தனர்.தீ விபத்து ஏற்பட்ட வீடுகளை ராதாபுரம் எம்.எல்.ஏ., மைக்கேல்ராயப்பன், அதிமுக மாவட்ட மாணவரணி செயலாளர் வக்கீல் ஏ.கே.சீனிவாசன், திசையன்விளை நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் ஜெயராமன், டவுன் பஞ்.,துணைத் தலைவர் டிம்பர் செல்வராஜ், பா.ஜ., மாவட்ட மகளிரணி தலைவி சாந்திராகவன், டவுன் பஞ்., கவுன்சிலர்கள் கண்ணன், ஜெயராஜ், பிலிப்போஸ் டேனியல், அதிமுக நகர செயலாளர் சுடலைமணி, சவுந்தர், ஒன்றிய எம்ஜிஆர் மன்ற செயலாளர் ஜெயபால், நகர ஜெ.,பேரவை செயலாளர் ஜெயக்குமார், தேமுதிக நகர செயலாள்ர செந்தில் சுரேஷ்குமார், பிரதீஸ்குமார், நிக்ஸன், மாரிமுத்து, வேல்முருகன் உட்பட பலர் பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி நிதியுதவியும் வழங்கினர்.