/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
கோழிக்கழிவுகளை கொட்டிய இருவர் நெல்லையில் கைது
/
கோழிக்கழிவுகளை கொட்டிய இருவர் நெல்லையில் கைது
ADDED : அக் 15, 2025 01:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம் மானுார் அருகே இறந்த கோழிகளை பொது இடத்தில் கொட்டிய பண்ணை உரிமையாளர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.
மானுார் அருகே மதவகுறிச்சியில் காட்டுப்பகுதியில் கோழிக் கழிவுகள் மற்றும் இறந்த கோழிகள் குவிந்து கிடந்ததால் துர்நாற்றம் வீசியது. மானுார் போலீஸ் விசாரணையில், மதவகுறிச்சியில் இருந்து உகந்தான்பட்டி செல்லும் வழியில் பாரத்மாரி 33, என்பவர் கோழி பண்ணை நடத்தி வருவதும், அங்கு நோயால் இறந்த கோழிகளை பொது வெளியில் கொட்டியதும் தெரியவந்தது.
பாரத் மாரி மற்றும் அங்கு வேலை செய்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பிலாம் அஹமது 20 ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.