UPDATED : அக் 21, 2026 12:28 AM
ADDED : அக் 21, 2026 12:26 AM

அ நிறம் | அளவு
திருநெல்வேலி: திருநெல்வேலி அருகே தாழையூத்து பகுதியைச் சேர்ந்த 11ம் வகுப்பு மாணவியை மதுரைக்கு கடத்திச் சென்று பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாக இருவர் போக்சோவில் கைது செய்யப்பட்டனர்.
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே பொந்துகம்பட்டியைச் சேர்ந்த ஜெயமணி மகன் மணி 28, கோடாங்கிபட்டியைச் சேர்ந்த கணேசன் மகன் சண்முகசுந்தரம் 23. இவர்கள் இருவரும் திருநெல்வேலியை சேர்ந்த மாணவியிடம் ஆசைவார்த்தை கூறி மதுரைக்கு அழைத்து வந்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டனர்.
அக்.16ம் தேதி முதல் மாணவியைக் காணவில்லை என பெற்றோர் தாழையூத்து போலீஸ் ஸ்டேஷனில் புகாரளித்தனர்.
இதுகுறித்து விசாரித்த போலீசார், மணி, சண்முகசுந்தரம் ஆகிய இருவரையும் போக்சோவில் கைது செய்தனர்.
