/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
மின்சாரம் பாய்ந்து இருவர் பலி
/
மின்சாரம் பாய்ந்து இருவர் பலி
ADDED : நவ 24, 2025 12:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி: மின்சாரம் பாய்ந்து இரு வாலிபர்கள் பலியாகினர்.
திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டானை சேர்ந்தவர் ராம்குமார், 25; தனியார் நிறுவன ஊழியர். இவரது சகோதரிக்கு திருமண ஏற்பாடுகள் நடந்தன.
அவரது வீட்டில் பந்தல், மின் விளக்குகள் அமைக்கும் பணியில் ஈடுபட்டபோது, மின்சாரம் பாய்ந்து ராம்குமார் பலியானார். கங்கைகொண்டான் போலீசார் விசாரிக்கின்றனர்.
அதேபோல, தென்காசி மாவட்டம், ஆவுடையானுாரை சேர்ந்தவர் நிக்சன் ராஜா, 21. வீட்டில் மாடுகளை வளர்த்து வருகிறார்.
மழை பெய்து கொண்டிருந்தபோது, தொழுவத்தில் மின்விளக்கு 'சுவிட்ச்' போட்ட போது மின்சாரம் பாய்ந்து பலியானார். பாவூர்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

