/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
ஜாதி மோதலால் பல்கலைக்கு விடுமுறை
/
ஜாதி மோதலால் பல்கலைக்கு விடுமுறை
ADDED : ஆக 30, 2025 06:29 AM
திருநெல்வேலி; திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை மாணவர்கள் ஜாதி ரீதியாக மோதிக் கொண்டதால், பல்கலைக்கு நேற்று விடுமுறை விடப்பட்டது.
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை வளாகத்தில், மாணவர்கள் டூ வீலர் பார்க்கிங் செய்யும் பிரச்னையில், இரு தரப்பினர் ஜாதி ரீதியாக மோதிக் கொண்டனர்.
இதில், மாணவர்கள் லட்சுமி நாராயணன், முத்து அருள் செல்வம் ஆகியோர் காயமடைந்தனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தினர் என்பதால் ஜாதி மோதலாக மாறியது.
இந்நிலையில், லட்சுமி நாராயணனை தாக்கியதாக முத்து அருள் செல்வம், சுந்தர் ஜான், மதார் பக்கீர் ஆகிய மூன்று மாணவர்களையும் வன்கொடுமை வழக்கில் போலீசார் கைது செய்தனர்.
பல்கலைக்கு நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டது.