/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
நடுவழியில் நிறுத்தப்பட்ட வந்தே பாரத்; கேட் கீப்பர்கள் இருவர் சஸ்பெண்ட்: மதுபோதையில் இருந்ததால் நடவடிக்கை

UPDATED : மார் 24, 2026 09:07 AM
ADDED : மார் 24, 2026 01:52 AM

திருநெல்வேலி: நாகர்கோவில் - சென்னை வந்தே பாரத் ரயில் சிக்னல் கிடைக்காமல் வள்ளியூர் அருகே சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. கேட்டை மூடாமல் மதுபோதையில் இருந்த 2 கேட் கீப்பர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் நேற்று முன்தினம் மதியம் 3:00 மணிக்கு சென்னை நோக்கி புறப்பட்டது. ரயில் வருகையை முன்னிட்டு, அந்த வழித்தடத்தில் அனைத்து கேட் கீப்பர்களும் தயார் நிலையில் இருக்க நாகர்கோவில் ஸ்டேஷன் மேலாளர் அறிவுறுத்தினார்.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பகுதியில் பணியில் இருந்த கேட் கீப்பர் அலைபேசி அழைப்பை ஏற்கவில்லை. சந்தேகமடைந்த அதிகாரிகள் மற்றொரு ஊழியரை சம்பவ இடத்துக்கு அனுப்பினர். அங்கு சென்ற ஊழியர், பணியில் இருக்க வேண்டிய கொம்பையா, சிராவன் இருவரும் மது போதையில் இருப்பதை அறிந்தார்.
கேட் கீப்பர்கள் போதையில் இருந்ததால் ரயில்வே கேட் மூடப்படவில்லை. இதனால் சிக்னல் கிடைக்காமல் வந்தே பாரத் ரயில் வள்ளியூர் அருகே சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. மாற்று ஊழியர் கேட்டுக்கு அனுப்பப்பட்ட பின் சிக்னல் கிடைத்து ரயில் புறப்பட்டது.
இதுகுறித்து விசாரணையை தொடங்கிய ரயில்வே நிர்வாகம், கேட் கீப்பர்கள் இருவரையும் நாகர்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி பரிசோதனை செய்தது. மது அருந்தியது உறுதியானதால் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இச்சம்பவம் திருவனந்தபுரம் ரயில்வே கோட்டத்திற்குட்பட்டதாக இருந்தாலும், சம்பவம் குறித்து அங்குள்ள அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரியாதது குறிப்பிடத்தக்கது.