/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
போலீஸ்காரர் காரை சேதப்படுத்திய மூவருக்கு வலை
/
போலீஸ்காரர் காரை சேதப்படுத்திய மூவருக்கு வலை
ADDED : பிப் 11, 2025 07:44 AM
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் அருகே வடக்கு அரியநாயகிபுரத்த சேர்ந்தவர் செல்வ குமரேசன் 38. நக்சல் தடுப்பு போலீஸ் பிரிவில் பணியாற்றுகிறார்.
நேற்று முன்தினம் இரவில் இவரது வீட்டிற்கு டூவீலரில் வந்த மர்ம நபர்கள் மூன்று பேர், இவரது காரை அரிவாளால் வெட்டி சேதப்படுத்தினர்.
விசாரணையில் சுத்தமல்லி சங்கன்திரடை சேர்ந்த முப்பிடாதி 28, முத்துக்குமார் 27, உள்ளிட்ட மூவர் எனத் தெரிந்தது. செல்வ குமரேசன் 3 மாதங்களுக்கு முன் சுத்தமல்லி ஸ்டேஷனில் பணியாற்றிய போது குடிபோதையில் தகராறு செய்த முப்பிடாதி, முத்துகுமார் மீது நடவடிக்கை எடுத்ததார். இதில் ஆத்திரமடைந்தவர்கள் இவ்வாறு செய்துள்ளனர். மூவரையும் போலீசார் தேடுகின்றனர்.

