/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
மேற்கு வங்க தொழிலாளி விபத்தில் உயிரிழப்பு
/
மேற்கு வங்க தொழிலாளி விபத்தில் உயிரிழப்பு
ADDED : பிப் 01, 2024 01:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி:மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் நஜீபுல் ஷேக், 26. கங்கைகொண்டான் தொழிற்பேட்டை நிறுவனங்களில் உள்அலங்கார பணிகளை செய்து வந்தார்.
நேற்று முன் தினம், கங்கைகொண்டான் நான்கு வழிச்சாலையில் சிப்காட் அருகே நடந்து சென்றார். அப்போது, கோவில்பட்டியில் இருந்து திருநெல்வேலி சென்ற சரக்கு வேன் நிலை தடுமாறி ஷேக் மீது மோதியது. அதே இடத்தில் உயிரிழந்தார்.
கங்கைகொண்டான் போலீசார் வேன் டிரைவர் ராஜேஷை, 26, கைது செய்தனர்.