/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
நாம் தமிழர் கட்சியில் இருந்து நெல்லை நிர்வாகிகள் விலகல்
/
நாம் தமிழர் கட்சியில் இருந்து நெல்லை நிர்வாகிகள் விலகல்
நாம் தமிழர் கட்சியில் இருந்து நெல்லை நிர்வாகிகள் விலகல்
நாம் தமிழர் கட்சியில் இருந்து நெல்லை நிர்வாகிகள் விலகல்
ADDED : டிச 01, 2024 07:22 AM

திருநெல்வேலி : திருநெல்வேலியில் சமீபத்தில் நடந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கட்சியினரை ஒருமையில் பேசுவதாக கூறி சிலர் வெளியேறினர்.
இளைஞர் அணி நிர்வாகிகள், குருதிக்கொடை அமைப்பினர் சுமார் 200 பேர் அக்கட்சியிலிருந்து வெளியேறியதாக நிர்வாகிகள் பார்வின், கண்ணன் உள்ளிட்டோர் நேற்று தெரிவித்தனர்.
அவர்கள் கூறியதாவது: சீமான் நாம் தமிழர் கட்சி கொள்கைகளில் இருந்து விலகிவிட்டார். திருநெல்வேலியில் ஒரே குடும்பத்தில் ஐந்து பேருக்கு பதவி வழங்குகிறார். கட்சியினரை சந்திப்பதே இல்லை. நிர்வாகிகளை ஒருமையில் பேசுகிறார். நாங்கள் ஸ்லீப்பர் செல் அல்ல.
உழைப்புக்கு மரியாதை கொடுக்கும் கட்சியில் இணைவோம். நாம் தமிழர் கட்சி தான் ஸ்லீப் ஆகி விட்டது என்றனர்.